Friday, 8 February 2013

அக்கா மகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த குறிச்சி கிராமம் கோரையாறு படுகையில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
அவரது உடலில் காயங்கள் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சுரேஷ் என்பதும், எடையர்நத்தத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
கொலையாளிகளை பிடிக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமார் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பெருகவாழ்ந்தான் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமானுஜம், அய்யப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் பெண் தகராறில் சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுரேஷ் பைங்காட்டூரில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜாவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜாவின் அக்கா மகளுடன் சுரேசிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதனை ராஜா கண்டித்தார். ஆனாலும் சுரேஷ் கள்ளத்தொடர்பை கைவிட வில்லை.
இதில் ஆத்திரமடைந்த ராஜா தனது மைத்துனர் முருகேசனுடன் இணைந்து சுரேசை அதிக அளவு மது குடிக்கவைத்து ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் முருகேசனை தேடி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger