Monday, 25 February 2013

என் மகனின் இளமை காலம் சிறையில் கழிந்துவிட்டது - கைதி பேரறிவாளனின் தாய் வேதனை

ராஜீவ்காந்தி கொலையில் பொய்யான குற்றச்சாட்டால் எனது மகனின் இளமைக்காலம் சிறையிலேயே கழிந்து விட்டது என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.

நாகையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகித்தனர். நாகை நகர செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேசியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன் உள்பட 3 பேருக்கும் தண்டனை தவறாக அளிக்கப்பட்டுள்ளது என நீதிபதி கே.பி. தாமஸ் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் 19 வயதில் சிறைக்கு சென்று 22 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறான். அவனது இளமை காலம் முழுவதும் சிறையிவேயே கழிந்துவிட்டது. இதனால் நான் பெரும் மன வேதனைக்குள்ளாகி உள்ளேன்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தூக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என் மகன் எழுதிய தூக்கு கொட்டடியிலிருந்து முறையீட்டு மடல் என்ற புத்தகத்தில் ராஜீவ் கொலை தொடர்பாக அனைத்து உண்மை செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ. ஆரம்பம் முதலே பொய் பேசி வருகிறது.

எனது மகனை மே 20-ந்தேதி கொலை நடந்த பிறகு ஜூன் மாதம் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி சி.பி.ஐ. அழைத்துச்சென்றுவிட்டு தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக அறிவித்தது. அதிலிருந்து சி.பி.ஐ. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதுபோல் பொய்யான செய்தியையே பரப்பி குற்றவாளிகள் போல் சித்தரித்தது.

இவ்வாறு அற்புதம்மாள் பேசினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger