Wednesday, 30 January 2013

வகுப்பறையில் ஆபாசபடம்

வால்பாறை : வால்பாறை, அரசு பள்ளி வளாகத்தில், ஆபாச நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி,
பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இணையதளத்தில் வெளியானது :


கோவை
மாவட்டம், வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது;
150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு
அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப்
படங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது. இது, இப்பள்ளியில்
பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, பள்ளிக் குழந்தைகளின்
பெற்றோர் மற்றும் பொதுமக்கள், வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில்,
நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வால்பாறை இன்ஸ்பெக்டர்
சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, ஆபாச ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரினர். உரிய
நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு
கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்
தலைவர் முனியசாமி மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை, சோலையாறு
எஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன், 49, வேறு ஒரு ஊராட்சி
ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையுடன், பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக
இருப்பது போன்ற காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

இது போன்ற
சம்பவங்களை பார்க்கும் போது, பள்ளியில் பயிலும் மாணவியருக்கு போதிய
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, ஆபாச நடவடிக்கைகளில்
ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மூன்றாவது சம்பவம்

வால்பாறை
அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர்
சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். இவரிடம்
இருந்து எண்ணற்ற பெண்களின் ஆபாசப் படக் காட்சிகள், சிடி க்களாக பறிமுதல்
செய்யப்பட்டன. இவரே வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமானது. இந்த அசிங்கமே
இன்னும் மறையாத நிலையில், அடுத்ததாக, வால்பாறை தாசில்தார் குணாளன் மீது,
அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிந்து வந்த காளீஸ்வரி என்ற பெண்,
செக்ஸ் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்விரு சம்பவங்களின்
பரபரப்பே அடங்காத நிலையில், மூன்றாவது சம்பவமாக, பள்ளி ஆசிரியர்,
ஆசிரியையின் ஆபாச காட்சிப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி, போராட்டத்தில்
மக்கள் குதிக்கும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : பாலியல்
புகாரில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவகாரம் குறித்து, உதவி
தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்துவிடம் கேட்ட போது, இத்தகைய செயலில்
ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை
எடுத்து, விரைவில், சஸ்பெண்ட் செய்யப்படுவர், என்றார்.


திட்டமிட்ட சதியாம்!

புகாரில்
சிக்கிய சோலையார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உதயனை தொடர்பு கொண்டு
கேட்டபோது, எனக்கு வேண்டாதவர்கள், என் படத்தை கிராபிக் செய்து,
இணையதளத்தில் படத்தை வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்; இது திட்டமிட்ட
சதி; என்னை பழி வாங்கும் நோக்கத்தோடு, சிலர் திட்டமிட்டு, இந்த காரியத்தை
செய்துள்ளனர், என்றார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger