Monday, 21 January 2013

பெண்களை மிரட்டும் ஆபாச படங்கள் !

கோவையை அடுத்த வால்பாறை பகுதியில் சமீப காலமாக பெண்களின் ஆபாச படங்கள் இண்டர்நெட்டில் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை மின்சார வாரிய என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் செக்ஸ் லீலை படங்கள் வெளியாகி பரபரப்பை


ஏற்படுத்தியது. அந்த படங்கள் என்ஜினீயரிடம் தொடர்பு வைத்திருந்த பெண்களை பயத்தில் ஆழ்த்தியது. அந்த என்ஜினீயர் தனது பொறுப்பில் இருந்த விடுதியின் குளியலறையில் கேமராவை பொருத்தி பெண்களை ஆபாச படம் எடுத்திருந்தார். அந்த படங்களும் இணையதளத்தில் வெளியானது.
இதனால் அந்த விடுதியில் தங்கிய சிலரது குடும்ப பெண்கள்கூட தங்கள் வீட்டு பெண்களையும் என்ஜினீயர் ஆபாச படம் எடுத்திருப்பாரோ என்று அச்சப்பட்டனர். அந்த என்ஜினீயரின் செக்ஸ் தொல்லை தாங்காமல் அலுவலக பெண் ஊழியர் பொலிசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் என்ஜினீயர் சுப்பிரமணியம் கைதானார். இந்த சம்பவத்துக்கு பின்னர் வால்பாறை தாசில்தாரராக இருந்த குணாளன் மீது அவரது உதவியாளராக பணிபுரிந்த பெண் செக்ஸ் குற்றம் சாட்டினார். அதன்பேரில் குணாளன் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வால்பாறை பகுதி பெண்களை மேலும் ஒரு ஆபாச பட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வால்பாறையை சேர்ந்த சில பெண்களின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பரிமாறி வருகிறார்கள்.
இதனால் அந்த படங்கள் தற்போது பலரிடம் பார்வைக்கு சென்றுவிட்டது. அதை பார்த்த பலர் அந்த ஆபாச படத்தில் உள்ள பெண்கள் தங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் அந்த ஆபாச படத்தில் இருப்பது அந்த பகுதியை சேர்ந்த கடை பெண் ஊழியர்கள் என்றும் பிரபலமான பெண்கள் என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். இந்த தகவல் காட்டுத்தீ போல் வால்பாறை முழுவதும் பரவியுள்ளது. பலர் தங்களது செல்போன்களில் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து இரசித்து வருகிறார்கள். இது வால்பாறை பகுதி பெண்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை அந்த படங்களில் நாமும் சிக்கி இருப்போமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
வால்பாறை பகுதி பெண்களின் படங்களை ஆபாச படமாக கிராபிக்ஸ் செய்து அந்த பெண்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த காட்சியில் இடம்பெறும் பெண்களின் படம் உண்மையானதா? அல்லது கம்ப்யூட்டர் உதவியுடன் கிராபிக்ஸ் செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை.இதுகுறித்து யாரும் இன்னும் பொலிசில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் ஆபாச காட்சிகள் விரைவாக இளைஞர்களின் செல்போன்களில் பரவி வருவதால் பாதிக்கப்படும் பெண்கள் விரைவில் பொலிசில் புகார் கொடுப்பார்கள் என தெரிகிறது.இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பொலிசாரை கேட்டுக்கொண்டனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger