Sunday, 6 January 2013

இன்று பிறந்த நாள் கொண்டாடிய நித்தியானந்தா

இன்று பிறந்த நாள் கொண்டாடிய நித்தியானந்தா, இன்றைய காலை வேப்பங்காயாக கசந்து போய் விட்டது.
நித்தியானந்தாவுக்கு இன்று 35 வயது பிறந்துள்ளதாம். இதனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தனது பரிவாரங்களுடன் வந்து தடபுடலாக பிறந்த நாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்தார்.
ஆனால் காலையிலேயே கோவில் நிர்வாகமும், காவல்துறையும் அதற்கு ஆப்பு வைத்து விட்டன.
காலையில், அண்ணாமலையார் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார் நித்தியானந்தா.ஆனால் திடீரென கோவில் நிர்வாகத்தின் சார்பில், உள்ளே வருவதாக இருந்தால் 5 பேர் மட்டுமே வர வேண்டும். ஊர்வலமாக வரக் கூடாது. கூட்டம் கூட்டினால், உள்ளே வைத்து ஏதாவது பேசினால் உடனே கேஸ் போட்டு விடுவோம் என்று எச்சரித்து விட்டது. இதனால் கோவிலுக்குள் வரவே இல்லை நித்தியானந்தா.
சரி போனால் போகிறது மாட வீதியி்ல் வலமாவது வரலாமே என்று நினைத்து அதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் வலம் வருவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டுமாம். ஆனால் அதைப் பெரவில்லை. இதனால் கோவிலுக்கு எதிரே நித்தியானந்தா மடம் சார்பில் போடப்பட்டிருந்த பந்தலைப் போலீஸார் பிரித்து மேயந்து விட்டனர். இதனால் நித்தியானந்தா கமுக்கமாக தனது ஆசிரமத்திற்குள்ளேயே அடக்கம் ஒடுக்கமாக பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ஷிப்ட் செய்து விட்டார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger