Friday, 11 May 2012

விவசாயம் பார்க்கும் ஐ.பி.எல் வீரர்! அதிர்ச்சி தகவல்!



ஜாமீன் கேட்கும் ராஜா!

2ஜி ஊழல் வழக்கில் சிக்கி ஓராண்டுக்கும் மேலாக திகார் சிறையில் இருக்கும் ராஜா இது வரை ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் இருந்தார் தற்போது முதன் முறையாக தனக்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த அதிரடி முடிவிற்கு காரணம் அவர் அமைச்சராக இருந்த போது துறை செயலராக இருந்த பெகுராவிற்கு நேற்று ஜாமின் கிடைத்ததே காரணம் என்று கூ� ��ப்படுகிறது இவரது மனு நாளை விசாரணைக்கு வருகிறது! ராஜா ராஜாவாட்டம் வருவாரா என்பது போகப் போகத் தெரியும்.


விவசாயம் பார்க்கும் கிரிக்கெட் வீரர்!

ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் எல்லோரும் கம்ரான் கானை மறந்திருக்க மாட்டீர்கள் ஐபிஎல் சீசன் இரண்டில் எதிரணிகளுக்கு தன் வேகப் பந்து மூலம் சிம்ம சொப்பனமாக இருந்தார் ராஜஸ்தானின் கம்ரான் கான்! இவரதுபந்து வீச்சில் அம்பயர்கள் குறை கூறியதால் சில போட� �டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டார். உ.பி மாநிலம் அசாம்கர் என்ற கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயி இவர். இவரின் திறமை கண்டு தன்னுடைய அணியில் சேர்த்துக் கொண்டு வாய்ப்பு வழங்கினார் ஷேன் வார்னே! இவருக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அப்பீல் செய்ய யாரும் உதவிட வில்லை! இப்போது புனே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவரை புனே நிர்வாகம் பத்துலட்ச ரூபாய் கொடுத்து திருப்பி அனுப்ப� � விட்டது. எனவே இவர் தன் சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார். இது குறித்து வார்ன் வருத்தம் தெரிவித்து உள்ளார். இந்த லட்சணத்துல ஐபிஎல் இளம் இந்திய வீரர்களை ஊக்குவிக்கிறது என்று பீத்திக்கறாங்க! என்ன கொடுமைடா சாமி!

ஓணான்களுடன் விமானத்தில் பயணம்!

ஜெர்மனியை சேர்ந்த 28வயது நபர் மூனிச் சென்று திரும்பும் சமயம் விமான நிலையத்தில் சோதனையிட்ட போது 49 பல்லி மற்றும் ஓனான்களை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.  இவைகளை சமைத்து உண்பதற்காக கொண்டு வந்ததாக கூறீய அவர் ஒரு ஓணானை கடித்து காண்பித்தார். விமானத்தில் இது போன்ற உயிரினங்களை கொண்டுவரக்கூடா� �ு என அவருக்கு 70ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கமகனாகிய தம்மு!

ஜூனியர் என்.டி. ஆர் நடித்த  தம்மு என்ற படம் ஆந்திராவில் செம ஹிட் அடித்திருக்கிறது. கதை என்ன தெரியுமா? பகை பாராட்டும் கிராமத்து சொந்தங்களை திருத்தவரும் இளைஞன் இறுதியில் அவனே கத்தியை எடுப்பது தான்! எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? சினிமாவுல இதெல்லாம் சகஜம் தானே தேவர்மகனின் லேட்டஸ்ட் ரீமேக் தான் இந்த தம்மு. இதை தமிழில் சிங்க மகன் என்று மொழி ம ாற்றி வெளியிட்டும் விட்டார்கள். ஹீரோயின்கள் யார் தெரியுமா? த்ரிஷா, கார்த்திகா! ஒரு வாட்டி பார்த்துட வேண்டியது தானே

குஜராத்தில் விஜய்கரோடி- சீமா கரேசியா ஜோடிதான் இப்போதைய ஹாட் டாபிக்! ஆடம்பர திருமணங்களை நடத்தும் இந்திய மரபில் இந்த ஜோடிகள் தங்களுடைய திருமணத்தை முப்பத்த� ��ந்து ஜோடிகளுக்கான திருமணத்தில் மிக எளிமையாக முடித்துக் கொண்டது. இவர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்! சீமா கரெசியா ஓர் பள்ளி ஆசிரியை! விஜய் கரோடி ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதுதான் இதில் ஹைலைட்டான விசயம்.

தமிழகத்தை சேர்ந்த ரஞ்சித் பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் முதல் இடத்தை பிடித்ததுடன் லண்டன் ஒலிம்பிக்கில்  நேரடியாக கலந்து கொள்ளும் தகுதியை பெற்று வந்திருக்கிறார். டிரிபிள் ஜம்ப் வீரர் ஆன இவரது பெடரேஷன் கோப்பை தாண்டல் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி தாண்டல் என்பதால் நேரடி வா� ��்ப்பை பெற்றுள்ளார் வென்று வா தமிழா!


இந்தியாவில் சாமியார்களுக்கு மவுசு குறைவதே இல்லை! ஒவ்வொருவரும் ஒரு சாமியாரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்போது ஒரு பாபா அவதரித்து விட்டார் இந்தியாவில்! பாபா ராம் தேவை பின்னுக்கு தள்ளி முன்� �ுக்கு வந்திருக்கும் இவரது பெயர் நிர்மல் பாபா! இவர் தரும் பிரசாதம் பானி பூரி! என் கைபட்டால் பானி பூரி மருந்தாகி விடுகிறது என்னும் இவரை மொய்க்கிறார்கள் பக்தர்கள்! அதை விட அதிகமாக பானி பூரி ஸ்டால்கள் இவரது ஆசிரம வாயிலில் முளைத்துள்ளன!
இந்த மனுசனுங்க திருந்தவே மாட்டானுங்களா?

மகேஷுக்கு அண்ணியா? நோ!நோ!

மகேஷ்பாபுவின் அண்ணனாக வெங்கடேஷ் நடிக்க தமிழ் தெலுங்க� �ல் என இரு மொழிகளில் வெளிவர உள்ள படத்தில் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை நாடினார்களாம்! வெங்கடேஷிற்கு ஜோடி என்பது ஓகேதான் ஆனால் மகேஷ்பாபுவிற்கு அண்ணியாகவா? முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம் இப்போது வாய்ப்பு கலகல அஞ்சலியிடம் போயுள்ளது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!




http://sex-story7.blogspot.com<>


<><><><><><><><><><><><><><><><><><><><><><><>

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger