Wednesday 18 April 2012

சந்தேக கோடு அது சந்தோஷ கேடு: மனைவிக்காக ரோட்டில் "தவம்'



மேலூர்: சந்தேகப்பட்ட கணவனை விட்டு மனைவி பிரிய, அவரை நினைத்து மனநலம் பாதித்த கணவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே 2 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் பரிதாப காட்சி தினமும் நடக்கிறது.

விருதுநகர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., இயற்பியல் படித்தவர் ஜோன் ராஜ்,35. கராத்தேவில் "பிளாக் பெல்ட்' பெற்றவர். மனைவி மீது தீராத காதல் கொண்ட ஜோன்ராஜூற்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், மதுரை மேலூர் அருகே வெள்ளரிபட்டி தனியார் நிறுவனத்திற்கு ஜோன்ராஜின் தந்தைக்கு மாறுதல் கிடைக்க, நிற� ��வன குடியிருப்பில் அனைவரும் தங்கினார். இங்கு மனைவி மீது ஜோன் ராஜூக்கு சந்தேகம் ஏற்பட ஆரம்பித்தது. அது பூதாகரமாக வெடிக்க, குழந்தையுடன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றார். அன்று முதல் ஜோன் ராஜூக்கு மனநலம் பாதிக்க ஆரம்பித்தது. "மனைவி எப்படியும் திரும்பி வருவார்' என கருதி, தினமும் விதவிதமான ஆடைகள் மற்றும் ஷூ அணிந்து, கத்தப்பட்டி டோல்கேட்டிற்கு வந்துவிடுகிறார். ஒரு குறிப்� ��ிட்ட இடத்தில் நின்றுக் கொண்டு, வாகனங்களில் மனைவி செல்கிறாரா என உற்றுப் பார்த்து தனக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார். வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல், நினைத்த நேரத்தில் இங்கே வந்துவிடுவார். இம்மனிதனின் சந்தேக கோடு, சந்தோஷ கேடாக மாறி போனது பரிதாம்தான்.

நன்றி தினமலர்


http://tamilarai.blogspot.in


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger