Saturday, 28 April 2012

உரிமையடையும் நாள் என்னாளோ?



உரிமையடையும் நாள் என்னாளோ?

வீடிழந்தோம்! குடியிருந்த ஊரிழந்தோம்!
நாடிழந்தோம்
நல்ல நண்பர்களை இழந்தோம்!
உறவிழந்தோம்
உற்றதுணைஇழந்தோம்!
பெற்ற மண்ணிழந்தோம்!
அகதிகளாம் நாங்கள்!
மாற்றாந்தாய் அரவணைப்பில்
மறந்திடுமா எங்கள் சோகங்கள்!
சொல்லிழந்தோம் மொழியிழந்தோம்
சோற்றுக்கும் நிற்க நிழலுக்கும்
போராடி � ��ோராடி சுமையாகிப்போனோம்!
மொழியாலே ஒன்றிணைந்தாலும்
விழியாலே வேறுபட்டு பாழும்
அரசியலில் பகடையாய் அடிபட்டு
வேறிழந்து தவிக்கிறோம் நாங்கள்!
எத்தனைதான் வசதிகள் கொடுத்திடினும்
எங்கள் சோகம் தீர்ந்திடுமா?
என் நாடு கிடைக்குமா? என்ற ஏக் கம்தான்
தீர்ந்திடுமா? இழந்தவனுக்குத்தான் தெரியும்
இழப்பின் வலி! எங்கள் � �லி கொஞ்சமல்ல!
வீதீயிலே விளையாடும் எங்கள் பிள்ளைகளுக்கு
எங்கள் நாடு மறந்து போகும் முன்னே
எங்கள் விதி மாறுமா?
எத்தனைதான் இழந்தாலும் இன்னும்
உணர்விழக்கவில்லை நாங்கள்! இதை
உணராமல் தமிழர்கள் எங்களை
தள்ளி வைப்பது ஏனோ? உணர்வாலே< /div>
ஒன்றுபட்டு உரிமையடையும் நாள்
என்னாளோ அன்னாளே எங்கள் பொன்னாள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகர லாமே!






http://youngsworld7.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger