விஜய் நடித்த `மதுர' படத்தை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். இவர் இப்போது, வினய்-ஷர்மிளா ஜோடியாக நடிக்கும் `மிரட்டல்' என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
படத்தின் கதைப்படி கதாநாயகி ஷர்மிளா, ஒரு கல்லூரி மாணவி. அவர் தன் தோழியுடன் கல்லூரி விடுதி அறையில் படித்துக்கொண்டிருக்கும்போது, முகமூடி அணிந்த மர்ம கும்பல் அங்கு வந்து, ஷர்மிளாவை வேனில் கடத்தி செல்கிறார்கள். பின்னர், லண்டன் ஆக்ஸ்போர்டு விமான தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அதி நவீன விமானத்தில் அவரை கடத்தி செல்கிறார்கள்.
இப்படி ஒரு காட்சியை, லண்டன� �� ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி விமான நிலையத்தில் சமீபத்தில் படமாக்கினார், டைரக்டர் மாதேஷ்.
முடிவடையும் நிலையில் உள்ள இந்த படத்தில் பிரபு, பாண்டியராஜன், சந்தானம், மன்சூர் அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
http://tamil-kurippugal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?