விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்கு சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும் என்று நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நோர்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"அனைத்துலக சட்டமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு தாமதமின்றி பதிலளிக்க வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் நோர்வே கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவும் நோர்வே அறிவித்துள்ளது.
அதேவேளை, ஐ.நாவுக்கான டென்மார்க்கின் நிரந்தரப் பிரதிநிதியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பவருமான ஸ்டீபன் ஸ்மிட், "சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
"மனிதஉரிமைகள் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல், பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு பதிலளித்தல் என்பன தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?