ஏற்கெனவே அஜீத், கோபிசந்த் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா, தெலுங்கிலும் இரு படங்களுக்கு ஓகே சொல்லி, ஒன்றில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
தமிழில் இன்னும் இரு பெரிய படங்களுக்கு அவருடன் பேசி வருகிறார்கள் இயக்குநர்கள்.
இத்தனை ஆண்டுகள் கடந்தும், தனக்கு இருக்கும் மவுசையும் வரவேற்பையும் பார்த்து அகமகிழ்ந்துபோன நயன்தாரா, நேற்று காலை 10 மணிக்கு திருப்பதிக்கு சென்றார்.
ஏழுமலையானை மனமுருக வேண்டிக் கொண்டு திரும்பிய அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திருமலையில் திரண்டுவிட்டனர்.
அவர்களுக்கு 'டாட்டா' காட்டிக் கொண்டே, 'திருமலைக்கு வந்து தரிசனம் முடித்த பிறகு மிகுந்த நிம்மதியை உணர்கிறேன்,' என்று கூறியபடி காரில் ஏறிக் கிளம்பினார் நயன்தாரா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?