Friday, 9 March 2012

மகளீர் உரிமை சுவரொட்டிகளை அகற்றிய இராணுவம்!


சர்வதேச மகளீர் தினத்தில் 'விடுதலைக்கான மகளிர் அமைப்பினால்" ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் குறித்த சுவரொட்டிகளை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.கொழும்பு, கோட்டே பிரதேசத்தில் நேற்று காலை சிலர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, LA 7438 என்ற இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனத்தில் சென்ற இராணுவத்தினர், சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது எனத் தடை விதித்துள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என மகளீர் அமைப்பினர் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த இராணுவத்தினர், சுவரொட்டிகளை ஒட்டுவதால் சூழல் அசுத்தமடைகிறது எனக் கூறியுள்ளனர்.

எனினும், வேறு ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மகளிர் அமைப்பினர், இவற்றால் சூழல் மாசடையவில்லையா எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இராணுவ அதிகாரியொருவர், இராணுவ உயர் அதிகாரியொருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.

இதனையடுத்து, இவை அரச விரோத சுவரொட்டிகள் என்பதால் இவற்றை ஒட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச மகளீர் தினத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் எந்தவகையில் அரச விரோத ஆர்ப்பாட்டமாக முடியும் என மகளீர் அமைப்பினர் இராணுவத்தினரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த இராணுவத்தினர், இது உங்களுக்குத் தேவையில்லையாத விடயம் எனவும், உடனடியாக இந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மகளீர் அமைப்பினரை அச்சுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான செயற்பாடுகளில் தலையீடு செய்ய இராணுவத்திற்கு தார்மீக உரிமை கிடையாது என மகளீர் அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், தமக்கு மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவிற்கமையவே தாம் பணியாற்றுவதாகவும், ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றுமாறும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

எனினும், இராணுவத்தினரின் உத்தரவிற்கு செவிசாய்க்காது மகளிர் அமைப்பினர் அங்கிருந்து அகற்றுசென்றுள்ளர்.

இதனையடுத்து மகளீர் அமைப்பினரது சுவரொட்டிகளை இராணுவத்தினர் முழுமையாக அகற்றியுள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger