ரஜினிக்கு செல்வாக்கை பலப்படுத்திய பல படங்களின் தலைப்புகளை கோடம்பாக்கத்தில் நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள். இந்த வியாபாரம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் பழைய படங்களை ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கே ரஜினி நடித்த கதாபாத்திரங்களை ரீபிளேஸ் செய்வதற்கு அஜித்தை விட்டால் ஆள் இல்லை என்கிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் பில்லா ரீமேக்கில் நடித்த அஜித்துக்கு அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்! அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் பில்லா பாகம் இரண்டில் தற்போது நடித்து வருகிறார் அஜீத். அஜித் நடித்து வரும் பில்லா - 2 ல், தூக்குடு படம் மூலம் பிரபலமான நடிகை மீனாக்ஷி தீட்சித் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா 2 எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் நாயகனாக அஜித்தும், நாயகியாக பார்வதி ஓமணக்குட்டனும் நடித்து வருகின்றனர். சக்ரி டோல்டி இப்படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பில்லா 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. முதற்கட்ட சூட்டிங் ஐதரபாத்தில் 30நாளும், 2ம் கட்ட சூட்டிங் கோவாவில் 39நாளும் முடிந்து, தற்போது 3ம் கட்ட சூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் தூக்குடு படம் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீட்சித், அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். ஏற்கனவே பில்லா படத்தில் "செய் ஏதாவது செய்...." என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது யாவரும் அறிந்ததே.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?