Saturday, 12 November 2011

ஜெயலலிதாவை அடித்து உதைத்தீர்களா? : எம்.ஜி.ஆர். உறவினரிடம் குறுக்கு விசாரணை

 
 
எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் நடிகர் தீபனிடம் செசன்சு கோர்ட்டில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
 
 
எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன். இவரது மனைவி சுதா. கடந்த 2008-ம் ஆண்டு சொத்து பிரச்சினை காரணமாக விஜயன் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். சுதாவின் சகோதரி பானு, போலீஸ்காரர் கருணாகரன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
 
சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கின் சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக நடிகர் தீபன் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் பானு தரப்பில் மூத்த வக்கீல் கே.எஸ்.தினகரன் கேள்வி கேட்டு குறுக்கு விசாரணை செய்தார்.
 
 
அதன் விவரம் :
 
 
உங்கள் மீது பானுவின் பணியாளர் ஒருவர் குற்றப்புகார் கொடுத்திருப்பது தெரியுமா?
 
 
சாட்சி சொல்வதை தடுப்பதற்காக புகார் கொடுத்துள்ளார்.
 
 
அடக்கத்துக்காக எம்.ஜி.ஆரின் உடலை வேனில் வைத்துக்கொண்டு சென்றபோது, அதில் உட்கார்ந்திருந்த ஜெயலலிதாவை நீங்கள் இழுத்து, அடித்து உதைத்தீர்களா?
 
 
ஞாபகம் இல்லை.
 
 
அது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டதாவது ஞாபகத்தில் உள்ளதா?
 
இல்லை.
 
 
விஜயன் கொலை வழக்கை விரைவு கோர்ட்டுக்கு மாற்றக்கோரி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சுதா சந்தித்து பேசியது தெரியுமா?
 
 
தெரியாது.
 
 
-இவ்வாறு விசாரணை நடைபெற்றது.
 
 
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் சிறப்பு வக்கீல் விஜயராஜ் ஆஜரானார். சுதாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை தீபனிடம் கேட்டு அவரை எதிர்த்தரப்பு வக்கீல் துன்புறுத்துகிறார் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை மற்றொரு தேதிக்கு நீதிபதி பி.தேவதாஸ் தள்ளிவைத்தார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger