7 ஆம் அறிவு படம் குறித்து வெவ்வேறு அபிப்ராயங்கள் இருந்தாலும், ஏகோபித்த பாராட்டு அப்படத்தில் இடம் பெறும் தமிழன் குறித்த வசனங்களுக்குதான். ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் அந்த காட்சிகளில் வசனத்தை ஒப்புக்கு ஒப்பிக்காமல் உணர்ச்சி பிழம்பாக உச்சரித்திருக்கிறார் சூர்யா.
இவ்வளவு பேசிய பின் அந்த படத்தை இலங்கையில் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்குமா? படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல்.
புத்தருக்கு இணையானவர் போதிதர்மர் என்ற வசனத்திற்காகவும், திருப்பி அடிக்கணும் என்ற வசனத்திற்காகவும் தடை செய்யப்பட்டிருக்கிறது இப்படம். அதுமட்டுமல்ல, இலங்கையின் கோபத்தை கிளறிய இன்னொரு வசனம், ஒன்பது நாடுகள் ஒன்று சேர்ந்து அடிப்பது வீரமல்ல, துரோகம் என்பது.
மறு ஆய்வுக்குழுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம் படம். அங்கே ஏகப்பட்டு வெட்டுகளுக்கு பிறகு படத்தை அனுமதிப்பார்கள் போல தெரிகிறது. பார்க்கலாம்...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?