Sunday, 4 September 2011

கமல்நாத் தான் மி���ப்பெரிய பணக்கார அமைச்சர்: ஏ.கே., அ��்தோணி பரம ஏழையாக இருக்கிறார்



புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 18 அமைச்சர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை பிரதமரின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் நகர்ப்புற அமைச்சர் கமல்நாத் பெரிய பணக்கார அமைச்சராக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 263 கோடி ஆகும். பாதுகாப்பு துறை ஏ.கே., அந்தோணியின் சொத்து 1. 8 லட்சம் மட்டுமே ஆகும். இந்த தொகைக்கு ஒரு வீட்டை ஒத்திக்கு கூட வாங்க முடியாது என்பது கூடுதல் விஷயம்.

தமது அமைச்சரவை சகாக்கள் தங்களுடைய சொத்து விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுகொண்டதற்கிணங்க மத்திய அமைச்சர்கள் 18 பேர் தங்களுடைய சொத்துக்கள் மதிப்பை வெளியிட்டுள்ளனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ள சொத்து விவரம் வருமாறு:

பிரதமர் மன்மோகன்சிங்: மொத்தம் 5 கோடி ரூபாய். இதில் சொத்துக்கள் 1 கோடியே 80 லட்சம், வங்கி கணக்கில் 3 கோடியே 20 லட்சம் உள்ளது.

நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி: ஒரு கோடியே 80 லட்சம்.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்: இவருக்கு மட்டும் 11 கோடி. இவரது மனைவி பெயரில் ரூ. 12 கோடியே 80 லட்சம்.

வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்: மொத்தம் ரூ. 12 கோடி .

வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா: ரூ.22 லட்சம், இவரது மனைவி பெயரில் ரூ. 21 லட்சம்.

பாதுகாப்பு துறை அமைசச்ர் ஏ.கே., அந்தோணி: இவரது பெயரில் ரூ. 1 லட்சம் 80 ஆயிரம். இவரது மனைவி பெயரில் 30 லட்சம் சொத்து உள்ளது. இவர்தான் குறைந்த சொத்து உள்ளவர் என்ற பெயரை பிடித்திருக்கிறார்.

நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத்: ரூ, 263 கோடி மட்டும் தான். இவர் இதற்கு முன்னதாக கம்பெனி விவகாரத்துறையை கவனித்து வந்தார். பிரதமரின் அமைச்சரவையில் இவர்தான் பணக்கார அமைச்சர் என்ற பெயரை தட்டிப்பறித்திருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த உரத்துறை அமைச்சர் மு.க., அழகிரி : ரூ. 30 கோடி.

சமீபத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த முரளிதியோரா: ரூ. 15 கோடியே 20 லட்சம்......!!!

நன்றி : தினமலர்



http://mobilesexpicture.blogspot.com

http://tamil-cininews.blogspot.com

http://ahotstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger