Friday, 1 March 2013

ஜப்பானிய பெண்ணை கற்பழித்த அமெரிக்க கடற்படையினருக்கு 10 ஆண்டு சிறை

ஜப்பானில் கூட்டு கடற்படை பயிற்சிக்காக சென்றிருந்த அமெரிக்க கடற்படை வீரர்களான கிரிஸ்டோபர் டேனியேல் பிரவுனிங் மற்றும் ஸ்கைலர் டோசியர் வாக்கர் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒக்கினாவா மாவட்ட தலைநகரான நாஹா-வில் ஜப்பானிய இளம்பெண் ஒருவரை கற்பழித்ததாக புகார் எழுந்தது.

இச்சம்பவத்தை கண்டித்து ஜப்பானில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அமெரிக்க வீரர்களை ஜப்பான் போலீசாரிடம் ஒப்படைக்க முதலில் மறுத்த அமெரிக்க கடற்படை அதிகாரிகள், பின்னர் ஜப்பான் அரசின் உத்தரவுக்கு இணங்க வேண்டியதாயிற்று.

இதனையடுத்து, கற்பழிப்பு குற்றம்  சாட்டப்பட்ட இருவர் மீதும் நாஹா மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று  நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் மற்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger