இது தமிழ் மணம் பற்றிய பதிவு.
ஒவ்வோரு பூவுக்கும் ஒரு மணமுண்டு.
ரோசா மணம்,மல்லிகை மணம்,முல்லை மணம் என அந்த மணங்களைக் குறிப்பிடுவோம்.
அது போலத் தமிழுக்கென்று இருக்கும் மணமே தமிழ் மணம்.
இதைத் தமிழ்ச் சுவை என்றும் அழைக்கலாம்.
நல்ல சுவையை ருசிப்பது இன்பம்.நல்ல மணத்தை நுகர்வதும் இன்பம்.
நல்ல தமிழைப் படிப்பதும் இன்பம்.
அப்படிப்பட்ட ஒரு சுவை,மணம் கம்பன் காவியத்தில் இருக்கிறது.
குகனும் பரதனும் சந்திக்கும் ஒரு பாடல்
"வந்தெதிரே தொழுதானை வணங்கினான், மலர் இருந்த
அந்தணனும் தலை வணங்கும் அவனும் அவனடி வீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுடையோர்
சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தியான்".
இருவரும் சந்திக்கும்போது யார் யார் காலில் விழுந்தார்கள்!பரதன் அரசன் என்பதால் குகன் அவன் காலில் விழுந்தானா?குகன் தன் அண்ணனின் தோழன்,அண்ணனால் தம்பியாக ஏற்றுக் கொள்ளப் பட்டவன் என்பதால் பரதன் அவன் காலில் விழுந்தானா என்பதை இங்கு கம்பன் சொல்லாமல் சென்றானோ?என்ன சொல்கிறான்-"அவனும் அவன் அடி வீழ்ந்தான்" இங்கு எந்த அவன் பரதன்,எந்த அவன் குகன்?
இது கம்பனின் தமிழ் மணம்!
மற்றொரு பாடல்.
வாலி ராமனின் அம்பு பட்டு விழுந்து கிடக்கிறான்.அப்போது வாலி கூறுவது போல் ஒரு பாடல்.
'கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை"
இங்கு ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் என்றால்,படமாகக் கூட வரைய முடியாத அளவு அதிக அழகுடையவன் என்பதே பொருள். இதற்கு மற்றொரு பொருளும் சிலர் கூறுவர்.
அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாக வரைவார்கள்.அவ்வாறு இந்தச் செயலை,அதாவது வாலியைக் கொன்ற செயலை ஓவியமாக வரைந்தால் அந்த ஓவியத்தில் ராமன் இருக்க மாட்டான் .ஏனெனில் அவன் மறைந்திருந்து கொன்றான் என வாலி மறைமுகமாக உனர்த்துவதாகவும் சொல்வார்கள்!
இது கம்பனின் தமிழ் மணம்!
http://veryhotstills.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?