Thursday, 20 October 2011

லோகுவின் ஆசை!---(சிறுகதை)



திரைஅரங்கிலிருந்து வெளி வந்த லோகுவுக்கு உடல் முழுவதும் ஒரு சூடு பரவியிருந்தது. பார்த்த படத்தில் வந்த சில காட்சிகள் அவனை வதைத்துக் கொண்டிருந்தன.நண்பர்கள் யாரும் உடன் இல்லாததால்,இன்று எப்படியாவது அந்த அனுபவத்தை பெற்று விட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தான்.அந்த அரங்கு இருந்த தெருவுக்குப் பக்கத்திலேயே, அதற்காகச் சில ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறான்.


அவன் தெரு முனையை அடைந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.குறுக்கும் நெடுக்குமாக இரு முறை நடந்தான்.அப்போதுதான் இருட்டிலிருந்து வெளி வந்தான் அந்த ஆள்.


"என்ன சார்?ஆள் வேணுமா"எனக் கேட்டான் .லோகுவும் தயக்கத்துடன் தலயை ஆட்டினான்.

"சார் பார்த்தா ரீஜண்டா இருக்கீங்க.நேத்துத்தான் ஆந்திராவிலிருந்து பார்ட்டி வந்திருக்கிது.ரூபாய் கொஞ்சம் அதிகம் .ஆனா பின்னால பிரச்சினை எதுவும் வராது. என்ன சொல்றீங்க"

லோகு மெல்லிய குரலில் கேட்டான்"எவ்வளவு?"

"பார்ட்டிக்கு 500.என் கமிசன் 50.லாட்ஜில ரூம்பு எடுக்கணும் அதுவும் ஒன் செலவுதான்." அவன் சொன்னான்.

லோகு"லாட்ஜில் ரூமா?' என இழுக்கவே அவன் சொன்னான் "அதுக்கெல்லாம் பயப்படாதே சார்.பக்கத்திலேயே லாட்ஜ் இருக்குது.நமக்கு வேண்டியவங்கதான்.நல்ல ரூமாப் போட்டுடலாம். 250தான்."

லோகு கூட்டிப் பார்த்தான்.800 தான் ,பர்சில் 1000 இருக்கிறது.

"சரி" என்றான்.

லோகுவையும் அழைத்துக் கொண்டு அவன் அருகில் இருந்த லாட்ஜுக்குச் சென்றான். பார்த்தாலே நிழலான விஷயங்கள் நடக்கும் இடம் எனத் தெரிந்தது.ரிசப்சனில் இருந்தவனிடம்."மணி, சாருக்கு ஒரு டிலக்ஸ் ரூம் போடு "எனச் சொல்லி விட்டு லோகுவிடம் 250 ரூபாயை வாங்கிக் கொடுத்தான்.மணி என்பவன் புத்தகத்தை விரித்து விட்டு கேட்டான்."சார் பேர் விலாசம் சொல்லுங்க."

லோகுவுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.ஒரு நிமிடம் யோசித்தான் பின் சொன்னான் "முத்துசாமி" விலாசம் தவறாக ஏதோ கொடுத்தான்.

லோகுவை அழைத்து வந்த ஆள் லோகுவிடம்"சார் நான் போயிக் கூட்டிட்டு வரேன் . 100ருபாய் அட்வான்ஸ் குடுங்க,அங்க குடுக்க."

லோகு 100 ரூபாய் கொடுத்தான்.

அந்த ஆள் புறப்பட்ட அந்த நேரத்தில்தான் அவர்கள் வந்தார்கள்------

இரண்டு போலீஸ்காரர்கள்!

உள்ளே நுழைந்த அவர்கள் அந்த ஆளைப் பிடித்துப் பிடரியில் ஒரு அறை விட்டனர். "ஏண்டா நாயே .எத்தனை தடவை சொன்னாலும் திருந்தவே மாட்டியா? நடடா" என்று அவனை இழுத்துப் போகும்போது லோகுவைப் பார்த்தனர்.

லோகுவுக்குச் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று.

அவர்கள் கேட்டனர்"யார் சார் நீங்க?"

"இல்ல ,தங்குவதற்கு ரூம் கேட்டு வந்தேன்" நடுங்கியபடி சொன்னான் லோகு.


"போங்க சார் போயி நல்ல லாட்ஜாப் பாருங்க!"

லோகு அவசரமாக அங்கிருந்து கிளம்பி திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினான் . கூடவே அவர்களும் கிளம்பினர்.

சிரிது நேரம் சென்றபின் போலிஸ்காரர்களும் அந்த ஆளும் திரும்பி வந்தனர்,சிரித்துப் பேசிக் கொண்டே!

லாட்ஜ் மணி அவர்கள் ஒவ்வொருவரிடமும் 50ரூபாயைக் கொடுத்தான்.

அந்த ஆள் புறப்பட்டான்"சரி,நான் அடுத்த வேட்டைக்குப் போறேன்"

போலிஸ்காரர்களும் கிளம்பினர்.அந்தச் சந்துமுனை இருட்டில் சென்று நின்றனர்!

"ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடியிருக்குமாம் கொக்கு"



http://veryhotstills.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger