பிரார்த்தனை என்பது,காரின் உபரிச் சக்கரம் போல் அல்ல.பிரச்சினையில் இருக்கும் போது உபயோகிப்பதற்கு;
அது எப்போதும் வழி நடத்த உதவும் சக்கரத் திருப்பி போன்றது.(steeringwheel)
காரின் முன்புறக்கண்ணாடி பெரிதாகவும்,பின்னே பார்க்கும் கண்ணாடி சிறிதாகவும் இருப்பது எதை உணர்த்துகிறது தெரியுமா?நமது கடந்தகாலத்தை விட எதிர்காலமே முக்கியமானது.முன்னே பார்த்து முன்னேறுங்கள்.
நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.ஒரு சில விநாடிகளே போதும் எரிப்பதற்கு.ஆனால் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமல்ல.இன்பம் வரும்போது அனுபவியுங்கள்;அது நீண்ட நாள் நிலைக்காது.துன்பம் வரும்போது கவலைப்படாதீர்கள்.அதுவும் நீண்ட நாள் நிலைக்காது.
பழைய நட்பு என்பது தங்கம் போன்றது.புதிய நட்பு என்பது வைரம் போன்றது.வைரம் கிடைக்கும்போது தங்கத்தை மறக்ககூடாது.ஏனெனில் வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை!
அநேக நேரங்களில் நாம் நம்பிக்கையிழந்து இதுதான் முடிவு என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுள் சொல்கிறார்—இது ஒரு திருப்பமே,முடிவல்ல என்று.
கடவுள் நம் பிரச்சினைகளைத் தீர்க்கும்போது அவரை நாம் நம்புகிறோம்.அவ்வாறு தீர்க்காதபோது அவர் நம்மை நம்புகிறார்.
மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்திக்கும்போது கடவுள் உங்கள் பிரார்த்தனை யைக் கேட்டு அவர்களுக்கு நன்மை செய்கிறார்.அது போல் உங்கள் நல்ல காலத்தில் நினைவு கொள்ளுங்கள்,மற்றவர்கள் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்று.
கவலைப்படுவது நாளைய துன்பங்களைத் தீர்க்காது;ஆனால் இன்றைய நிம்மதியைக் கெடுத்து விடும்.
http://veryhotstills.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?