வெளி நாட்டுக்குப் பயணம் சென்று திரும்பிய மிஸ்டர் x மனைவியிடம் கேட்டார்"என்னைப் பார்த்தால் வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்கிறேனா?"
மனைவி சொன்னாள்"இல்லையே!ஏன் கேட்கிறீர்கள்?"
X சொன்னார்"லண்டனில் ஒரு பெண் என்னைப்பார்த்துக் கேட்டாள்"நீ வெளிநாட்டுக் காரனா?" என்று.
அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணி எக்ஸிடம் கேட்டார் "உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாரும் பிறந்திருக்கிறார்களா?"
எக்ஸ் சொன்னார்"இல்லை!சின்னக் குழந்தைகள்தான் பிறப்பார்கள்!"
காந்தி ஜெயந்தி பற்றிக் குறிப்பெழுதச் சொன்னதற்கு எக்ஸ் எழுதினார்"காந்தி ஒரு மகான்.ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது!"
ஆட்டோவில் தன் மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்தார் எக்ஸ்.ஓட்டுநர் பின் பார்க்கும் கண்ணாடியைச் சரி செய்வதைக்கண்ட எக்ஸ் கோபமாகச் சொன்னார்"என் மனைவியைப் பார்க்கிறாயா? நீ பின்னாலே வா .நான் வண்டி ஓட்டுகிறேன்."
எக்ஸ் சொன்னார்"அந்தப் பெண் செவிடு என நினைக்கிறேன்."
மற்றவர் கேட்டார்" ஏன் அப்படி நினைக்கிறாய்?"
எக்ஸ் சொன்னார்"நான் அவளைக் காதலிக்கிறேன் எனச்சொன்னேன். அவளோ சம்பந்தமில்லாமல் அவள் செருப்பு புதிது என்று சொன்னாள்!"
இண்டர்வியூவில் எக்ஸிடம் கேட்டார்கள்"உங்களுக்கு MS office தெரியுமா?"
அவர் சொன்னார்"நீங்கள் விலாசம் கொடுத்தால் நான் அங்கே போய் விடுவேன்."
ஆசிரியர் மாணவன் எக்ஸிடம் கேட்டார் "ஏசு, கிருஷ்ணர்,காந்தி அவர்களுக்குள் ஒற்றுமை என்ன?"
எக்ஸ்;"மூவரும் அரசு விடுமுறை அன்று பிறந்தவர்கள்!"
---------------------------------------------------------------------
உங்கள் சிந்தனைக்கு-
வாழ்க்கையின் மூன்று நிலைகள்!
1.பதின்ம வயது--------நேரம் இருக்கிறது,உடல் சக்தி இருக்கிறது,ஆனால் பணமில்லை!
2.பணிக்காலம்--------சக்தி இருக்கிறது;பணம் இருக்கிறது;ஆனால் நேரமில்லை!
3.முதுமைக்காலம்----நேரம் இருக்கிறது;பணம் இருக்கிறது ;ஆனால் சக்தியில்லை!
--------------------------------------------------------------------------------
http://veryhotstills.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?