Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Saturday, 1 March 2014

ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் கொலை

- 0 comments
காங். துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் கொலை

அசாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்
எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்காட்டில் ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்ணின் கணவரே அவரை எரித்து
கொலை செய்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் சுயஉதவி
குழுவினருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.


[Continue reading...]

Tuesday, 3 September 2013

சிரியாவில் போர் அபாயம்: இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு Syria war danger indian rupees value decrease

- 0 comments
சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் அபாயத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச வெளி மார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 68.85 ஆக வீழ்ச்சி அடைந்தது.
இது இந்திய பங்கு சந்தையிலும் சரிவை ஏற்படுத்தி உள் நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து சிறிதளவு மீண்டது.
கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு 66, 67 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் இன்று ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக சரியத் தொடங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 68 ஆக சரிந்தது. தொடர்ந்து 68.50 ஆக மேலும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு 68.60 என்ற அளவில் உள்ளது.
[Continue reading...]

Friday, 30 August 2013

டாப்-20 ஊழல்கள் Top 20 scams

- 0 comments

இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய டாப் 20 ஊழல்கள் சிறப்பு பார்வை Top 20 scams that made India ashamed

கடுமையான பொருளாதார சிக்கலில் இந்தியா சிக்கித் தவிக்கும்   இவ்வேளையில், நமது நாட்டில் நடைபெற்ற டாப்-20 ஊழல்களை தெரிந்துக் கொள்வது நலமாக இருக்கும்.

1987-போபர்ஸ் ஊழல்


சுவீடன் நாட்டில் இருந்து இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் ரக பீரங்கிகள் வாங்குவதற்காக போடப்பட்ட 285 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு. 13-7-2013 அன்று இந்த ஊழலின் மையப்புள்ளியான குவாத்ரோச்சியின் மரணத்துக்கு பின்னர் இந்த ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.

1990-ஹவாலா ஊழல்

பா.ஜ.க. ஆட்சி காலத்தில் பிரபல ஹவாலா ஏஜெண்ட்கள் ஜெயின் சகோதரர்கள் மூலம் இந்திய அரசியல்வாதிகள் சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு. இவ்விவகாரத்தில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

1992-பங்குச்சந்தை ஊழல்

போலி வங்கி ஆவணங்களின் மூலம் பங்குச் சந்தையில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு.  குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா மீது அவர் சாகும் 2001 வரை வழக்கு நடைபெற்றது. அவரது மரணத்துக்கு பின்னர் இவ்வழக்கு கைவிடப்பட்டது.

1996-கால்நடை தீவன ஊழல்

பீகார் மாநில முதல் மந்திரியாக லல்லு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டியதாக குற்றச்சாட்டு.

ஊழல் உறுதி செய்யப்பட்டதால் லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகல். வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

2001-பங்குச்சந்தை ஊழல்

போலி ஆவணங்களின் மூலம் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதாக கூறி கனரா வங்கியில் 48 கோடி ரூபாய் மோசடி செய்த கேத்தன் பரேக்குக்கு 2017 வரை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை.

2003-தாஜ் காரிடர் ஊழல்

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுலாவாசிகளை கவரும் வண்ணம் மேம்படுத்த மாயாவதியின் ஆட்சிக் காலத்தில் 175 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டது.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், தனது பதவி காலத்தில் 1.1 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்ற மாயாவதியின் சொத்து மதிப்பு 15 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஒரேயொரு வங்கி கணக்கில் மட்டும் 2 1/2  கோடி ரூபாய் பிடிபட்டது. இந்த ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

2005-நீர் மூழ்கி கப்பல் ஊழல்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனமான தாலேஸ் தயாரிப்பில் ஸ்கார்பென் நீர்மூழ்கி போர் கப்பல்களை வாங்க தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்த 2005ம் ஆண்டு 19 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை பெற தாலேஸ் நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கு ரூ.500 கோடி லஞ்சம் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பின் நாளில், இந்த ஊழலை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அடுக்கடுக்காக பெருகி வந்த இதர ஊழல்களில், நீர்மூழ்கி கப்பல் ஊழல் விவகாரம் மறக்கடிக்கப்பட்டது.

2008-ஓட்டுபோட எம்.பி.க்களுக்கு லஞ்சம்

22-7-2008 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக ஒரு எம்.பி.க்கு 10 கோடி ரூபாய் வரை காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா தந்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க. எம்.பி.க்கள் அந்த பணப்பையுடன் வந்து பாராளுமன்றத்தில் புயலை ஏற்படுத்தினர்.

2008-மதுகோடா ஊழல்

2006 முதல் 2008 வரை இரண்டே ஆண்டுகள் ஜார்கண்ட் முதல் மந்திரியாக இருந்த மதுகோடா 2 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன.

விசாரணை நடைபெற்று வருகிறது. சிறை தண்டனை அனுபவித்து வந்த மதுகோடா சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2009-சத்யம் நிறுவன ஊழல்

பங்குகளின் மதிப்பை அதிகரிக்கச் செய்வதற்காக உண்மையான வரவு-செலவு அறிக்கையை மாற்றி ரூ.300 கோடி அதிகம் சம்பாதித்தது போல் கணக்கு காட்டியதாக சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மீது குற்றச்சாட்டு. வழக்கு நடைபெற்று வருகிறது.

2010-பெல்லாரி சுரங்க ஊழல்

கர்நாடக முதல் மந்திரியாக எடியூரப்பா பதவி வகித்த போது ரெட்டி சகோதரர்கள் எனப்படும் கருணாகர ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகியோருக்கு முறைகேடான வகையில் சுரங்க உரிமம் அளித்த வகையில் மாநில அரசுக்கு 16 ஆயிரத்து 85 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு.

ரெட்டி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

2010-காமன்வெல்த் விளையாட்டு ஊழல்

2010-ம் ஆண்டு புதுடெல்லியில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற போது இப்போட்டியின் அமைப்பாளராக செயல்பட்ட சுரேஷ் கல்மாடி பல்வேறு காண்டிராக்ட்களில் ஊழல் செய்து நாட்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு. வழக்கு நடைபெற்று வருகிறது.

2010- 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

2-ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத்தொடர்புக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அத்துறையின் முன்னாள் மந்திரி ஆ.ராசா இந்திய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றச்சாட்டு.

இந்த இழப்பை சி.ஏ.ஜி. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என யூகத்தின் அடிப்படையில் கூறியிருந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது. வழக்கு நடைபெற்று வருகிறது.

2011-ஆதர்ஷ் ஊழல்

கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்குவதற்காக கட்டப்பட்ட 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பில், சட்டமீறலாக அரசியல்வாதிகளும், உயிருடன் உள்ள ராணுவ உயரதிகாரிகளும் ஒதுக்கீடு பெற்று பலனடைந்ததாக குற்றச்சாட்டு.

இதில், தற்போதைய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அப்போதைய மகாராஷ்டிரா முதல் மந்திரி அசோக் சவான் ஆகியோர் பலன் அடைந்ததை வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல் மந்திரி அசோக் சவான் பதவி விலகினார்.

2011-ஆண்ட்ரிக்ஸ் தேவா ஊழல்

இந்திய விண்வெளி துறையான ஆண்ட்ரிக்ஸ் தேவா மல்டிமீடியா நிறுவனத்துக்கு 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஜி.சாட் செயற்கைக்கோளில் இருந்து ஒதுக்கீடு செய்து அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு.

2011-டாட்ரா டிரக் ஊழல்

விதிமுறைகளை மீறிய வகையில் லண்டனை சேர்ந்த ஓர் இடைத்தரகரின் மூலம் ராணுவத்துக்கு 600 டாட்ரா ரக வாகனங்களை வாங்கிய வகையில் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவ உயரதிகாரிகள் 750 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், டாட்ரா நிறுவனம் எனக்கு கூட 14 கோடி ரூபாய் லஞ்சமாக தர சிலர் முன் வந்தனர். நான் அதை மறுத்து விட்டேன் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

2012-நிலக்கரி சுரங்க ஊழல்

2004-2009க்கு இடைப்பட்ட காலத்தில் தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டியது. பின்னர் இந்த இழப்பு 1.86 லட்சம் கோடி தான் என சி.ஏ.ஜி. பல்டி அடித்தது.

இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்

இந்திய விமானப் படைக்கு இத்தாலியில் உள்ள பின் மெக்கானிக்கா நிறுவனத்திடமிருந்து 12 வி.வி.ஐ.பி. (மிக முக்கியமான தலைவர்களை ஏற்றிச் செல்லும்) ஹெலிகாப்டர்களை வாங்க 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதில், இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி தியாகி உள்பட பல்வேறு அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை பெற்ற பின் மெக்கானிக்கா நிறுவனத்திடமிருந்து ரூ.370 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு.

பாதுகாப்பு மந்திரி அந்தோணியின் உத்தரவின்பேரில் மேலிட விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-ரெயில்கேட் ஊழல்

ரெயில்வே துறையின் ஒப்பந்தங்களை வழங்குவதாக உறுதியளித்து, ஒப்பந்தகாரர்களான இருவரிடமிருந்து 90 லட்சம் ரூபாயை பவன்குமார் பன்சாலின் மருமகன் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு. பவன்குமார் பன்சால் பதவி விலக நேரிட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-உ.பி. சுகாதார ஊழல்

உத்தரபிரதேச முதல் மந்திரியாக மாயாவதி பொறுப்பேற்றிருந்தபோது, கிராமப்புற சுகாதார நிதியில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டப்பட்டதாக குற்றச்சாட்டு. சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

மொத்தத்தில், இந்தியாவில் 1992 முதல் இதுவரை வெளிச்சத்திற்கு வந்த ஊழல்களில் மட்டும் 80 லட்சம் கோடி ரூபாய்க்கும் அரசியல்வாதிகளின் பைகளை சென்றடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
[Continue reading...]

Thursday, 29 August 2013

இன்னும் 5 வருடங்கள் காங்கிரஸ் வசம் கொடுங்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா மீளும் - கருணாநிதி

- 0 comments

தி.மு.க. தலைவர்
கருணாநிதி வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின்
மதிப்பு தொடர்ந்து சரிந்து 68.80 என
வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார
நெருக்கடியிலிருந்து அமெரிக்கா
தன்னைப் பாதுகாத்துக்
கொள்வதற்காகத்தான் டாலரின்
மதிப்பை உயர்த்துவதற்கான
நடவடிக்கைகளில்
இறங்கியிருப்பதாகவும், அதன்
விளைவாகத்தான் இந்தியா,
இந்தோனேசியா, பிரேசில்,
தென்னாப்பிரிக்கா, துருக்கி போன்ற
நாடுகளின் நாணயங்களின்
மதிப்பு வேகமாக
சரிந்து வருவதாகவும்
சொல்லப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள்
பிரதமராக இருந்தார்.
அப்போது டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பு 4.76 ஆகும்.
இந்திராகாந்தி 15 ஆண்டுகள் பிரதமராக
இருந்தபோது, ரூபாய் மதிப்பு 11.36
ஆகும். ராஜீவ்காந்தி காலத்தில் ரூபாய்
மதிப்பு 16.22 ஆகும். பி.வி.நரசிம்மராவ்
காலத்தில் 35.43 ஆகும். வாஜ்பாய்
காலத்தில் ரூபாய் மதிப்பு 45.31 ஆகும்.
மன்மோகன் சிங்கின் 9 ஆண்டு கால
ஆட்சியில் 68.80 ஆகும்.
இது வரலாறு காணாத வகையில் மிகப்
பெரிய வீழ்ச்சியாகும்.
தொய்வடைந் திருக்கும் இந்தியப்
பொருளாதாரத்தைத்
தூக்கி நிறுத்தி வலுவூட்டாவிட்டால்,
டாலருக்கு நிகரான ரூபாயின்
மதிப்பு 75 ஆகச் சரியும்
நிலைமை உள்ளது என்று வல்லுநர்கள்
எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், நடப்பாண்டு,
ஜனவரி முதல், இதுவரை, அமெரிக்க
டாலருக்கு எதிரான ரூபாயின்
மதிப்பு 19.50 சதவிகிதத்திற்கும்
அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது இந்தியப் பொருளாதாரத்தில்
இதுவரை கண்டும் கேட்டுமிராத
காரிருளாகும்.
அமெரிக்க டாலரின்
நிலைமை இவ்வாறிருக்க,
இங்கிலாந்து பணமான
“பவுண்டு”க்கு நிகராகவும் ரூபாயின்
மதிப்பு சரிந்துள்ளது.
ஒரு “பவுண்டு”க்கு நிகரான
ரூபாயின் மதிப்பு 106 ஆகக்
குறைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய
பணமான “யூரோ” வுக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு 92 ஆகவும், சுவிஸ்
“பிராங்க்” மதிப்பில் ரூ.75 ஆகவும்,
கனடா டாலர் மதிப்பில் ரூ. 65 ஆகவும்,
ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் ரூ. 60
எனவும், நியூசிலாந்து டாலர் மற்றும்
சிங்கப்பூர் டாலர் மதிப்பில் ரூ.50க்கும்
சரிந்துள்ளது. குவைத் “தினார்”
மதிப்பு இந்திய ரூபாயில்
ரூ.240க்கு அதிகம் என்ற
நிலையை எட்டியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சங்கிலித்
தொடர் போன்ற விளைவுகள்
ஏற்படுவது தவிர்க்க முடியாதது. கடந்த
சில நாட்களாக பங்கு சந்தையிலும்
சரிவு ஏற்பட்டு வருகிறது.
முதலீட்டாளர்களின் பங்குகளின்
மதிப்பு 170 லட்சம்
கோடி குறைந்துள்ளது. ரூபாய்
மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க மத்திய
அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருவதாகக் கூறப்பட்டாலும்,
எதுவும் உடனடியாகப் பயனளிப்பதாகத்
தெரியவில்லை.
பொதுத்துறை எண்ணெய்
நிறுவனங்களும்,
இறக்குமதி நிறுவனங்களும்
டாலரை அதிக அளவில்
கொடுத்தே கொள்முதல் செய்கின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில்
அமெரிக்க டாலர்களை வாங்குவதால்,
அன்னிய நாடுகளில் வெளிச்சந்தையில்
இந்திய ரூபாயின்
மதிப்பு சரிந்து வருகிறது.
சிரியா நாட்டில் நடைபெற்று வரும்
கலவரத்தால் 27-8-2013 அன்று லண்டன்
வர்த்தக சந்தையில் கச்சா எண்ணெய்
விலை 0.4 சதவிகிதம் உயர்ந்தது.
விலை மேலும் அதிகரிக்கும்
என்று கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் நிறைவான
பொருளாதார அறிவு படைத்தவர்தான்.
அவர்தான்
இருபதாண்டுகளுக்கு முன்பு நடை
பெற்ற புதிய பொருளாதாரச்
சீர்திருத்தங்களுக்குக் காரணகர்த்தாவாக
இருந்தவர். பழைய பொருளாதார
உத்திகள் பலனளிக்காது என்றால், புதிய
முறைகளைக்
கையாண்டு வெகுவிரைவில்
தீர்வு காண வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்,
ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த
மத்திய அரசு தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்
, நிதிப் பற்றாக்குறையை மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 4.8
சதவிகிதமாகக் குறைக்க
நடவடிக்கை எடுத்து வருவதாகவும்
சொல்லியிருக்கிறார். மேலும்
நடப்பு கணக்குப் பற்றாக்குறையை 7
ஆயிரம் கோடி டாலருக்குள் அடக்க
வேண்டுமென்று நம்முடைய
நிதியமைச்சர்
கருத்து தெரிவித்துள்ளார்.
நாம் அதிக
அளவுக்கு ஏற்றுமதி செய்தால் நடப்புக்
கணக்கில் உபரி ஏற்படும். நாம் அதிக
அளவுக்கு இறக்குமதி செய்தால்
நடப்புக் கணக்கில்
பற்றாக்குறை ஏற்படும். இந்தப்
பற்றாக்குறை அதிகமாக
ஏற்படும்போது, பொருளாதார
நெருக்கடியை உண்டாக்கும். நடப்புக்
கணக்கு பற்றாக்குறை என்பதுதான்;
தற்போது 8900 கோடி டாலர்
பற்றாக்குறையாக அதிகரித்துள்ளது.
இந்த அளவிற்கு நடப்புக் கணக்கு பற்றாக்
குறை அதிகமாகக் காரணம்,
கச்சா எண்ணெய், தங்கம்
ஆகியவற்றை அதிகமாக
இறக்குமதி செய்வதுதான்
என்று அரசு தெரிவிக்கும் காரணம்
மட்டுமே உண்மையானதல்ல.
நாம் இறக்குமதியைப் பற்றிப்
பேசும்போது,
இறக்குமதி செய்யப்படும் மூலப்
பொருள்களைப் பற்றியும்
புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தயாரிப்பாளர்
ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி
செய்வதற்காக மூலப்
பொருளை இறக்குமதி செய்வதுதான்
மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்
பொருளை இறக்குமதி செய்து, புதிய
பொருள்களைத் தயாரித்து அதிக
விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம்
இறக்குமதியால் ஏற்படும் நடப்புக்
கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட
முடியும்.
2004-2005இல் மூலப் பொருள்களின்
இறக்கு மதி 2550 கோடி டாலர்
அளவுக்கு இருந்தது. தற்போது 58700
கோடி டாலருக்கு மூலப் பொருள்கள்
இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதுபோன்ற காரணங்களால்தான் டாலர்
மதிப்பு மிகவும் உயர்ந்து,
அதற்கு நிகரான இந்திய ரூபாயின்
வெளி மதிப்பு வரலாறுகாணாத
அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இந்த
ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை
ரூபாய் மதிப்பு 18 சதவிகிதம்
வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக
இந்த நிதி ஆண்டில் பொருளாதார
வளர்ச்சி 5 சதவிகிதத்திற்கும்
கீழே செல்லும் என்று கூறப்படுகிறது.
நமது இயற்கை வளங்கள் எல்லை யற்றவை.
நமது மனித வளம் ஈடு இணையற்றது.
இந்தியா விடுதலை அடைந்ததற்குப்
பின்னர் எத்தனையோ சவால்களைச்
சந்தித்து முன்னேறி வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தப்
பொருளாதாரச் சோதனையிலும்
இந்தியா நிச்சயம் வெற்றிபெறும் என
எதிர்பார்ப்போம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

[Continue reading...]

Wednesday, 21 August 2013

இந்திய எல்லைக்குள் சீனா மீண்டும் ஊடுருவியது Chinese troops intrude 20 kms inside Indian boundary again

- 0 comments
இந்திய எல்லைக்குள் கடந்த மே மாதம் சீனா மீண்டும் ஊடுருவியது. வாபஸ் பெற்றுச்சென்ற இடத்துக்கு மீண்டும் தனது படைகளுடன் அத்துமீறி நுழைந்து உள்ளது. சீனப்படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தன.

சுமார் 19 கி.மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் ஊடுருவி இருந்தன. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின.

அவ்வேளையில், சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண சீன-இந்திய ராணுவ அதிகாரிகள் கூட்டாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதில் சமரசம் ஏற்பட்டு, சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்தது. அதன்படி, அத்துமீறி நுழைந்த பகுதியில் இருந்து சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன.

இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் உள்ள சக்லகாம் பகுதியில் மீண்டும் கடந்த 13ம் தேதி 20 கி.மீட்டர் தூரம் வரை ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள், இங்கு 2 நாட்களுக்கும் மேலாக தங்கியுள்ளனர்.

அவர்களின் ஊடுருவலை கண்டுபிடித்த இந்திய படையினர் வெளியேறும்படி பேனர் களை காட்டிய பின்னர் அவர்கள் திரும்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதைப்போன்று எல்லை கடந்து வீரர்கள் முன்னேறி செல்வதும், பின்னர், பின்வாங்கி செல்வதும் எல்லைக் கோட்டுப் பகுதியில் சகஜமாக நடைமுறை தான் என ராணுவ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களில் இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் சுமார் 150 முறை ஊடுருவியுள்ளனர். இதே போல், இந்திய வீரர்களும் சில வேளைகளில் சீன எல்லைக்குள் தெரியாமல் பிரவேசித்ததுண்டு எனவும் கூறப்படுகிறது.
[Continue reading...]

Thursday, 8 August 2013

கோபால்தாஸ் போராட்டம்

- 0 comments

கோபால்தாஸ் போராட்டம்
------------------------------------
ஹரியானாவை சேர்ந்த கோபால்தாஸ் என்னும்
துறவி கடந்த 81 தினங்களாக மத்திய மாநில
அரசுகளை எதிர்த்து போராடி வருகிறார். மக்கள்
மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றாலும்,
இவரை பற்றி ஒரு வார்த்தை கூட எந்த
ஒரு மீடியாவிலும் வரவில்லை.

இவரின்
போராட்ட நோக்கம் மக்களுக்கு சுத்தமான பால்,
பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் &
பசு பாதுகாப்பு. இதன் பின்னணியில் உள்ள
பல்வேறு ஊழல்களையும்,
மாபியா நோக்கங்களையும் வெளிப்படுத்தியதன்
காரணமாக இவரின் போராட்டங்கள்
இருட்டடிப்பு செய்யப்படுகிறது;
அதற்கு மீடியாவும் துணை போகிறது. இவரின்
போராட்டம் பற்றிய சில செய்தி துளிகள்,

• மேய்ச்சல் நிலமாக இருந்த ஹரியானாவின் 18
லட்சம் பசுக்கள் மேய வேண்டிய பல லட்சம்
ஏக்கர்கள் ஊழல் காரணமாக மிக குறைந்த
குதகைக்கும் பிற காரணங்களுக்கும்
அழிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க வேண்டும்.

• இங்கிலாந்து அரசுக்கு வருடம் 33,000 டன்
பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்ய
சுதந்திரத்தின்போதே ரகசிய ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படுத்துகிறார்!

• இந்தியாவில் சப்ளை செய்யப்படும் பாலில்
88% கலப்படம்!

• இதனால் அதிகரித்த தீவன
தேவையை செயற்கை தீவனம் வாங்கிய
வகையிலும் பெரும் ஊழல்
நடப்பதை வெளிப்படுத்துகிறார்.

• உண்ணாவிரத
போராட்டத்தோடு மாட்டு வண்டியில் கிராமம்
கிராமமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம்
செய்கிறார். இதை குறித்து பிரதமர, முதல்வர்,
தலைமை நீதிபதி என பலருக்கும் கடிதம்
எழுதியும் எவனும் கண்டுகொள்ளவில்லை.
ஆயினும் பொதுமக்கள் ஆதரவு பெருமளவில்
பெருகி வருகிறது.

• காவல்துறையால் அர்ரஸ்ட்
செய்யப்பட்டு ஜெயிலிலும் போராட்டம் தொடர
சக கைதிகளும் இவரோடு போராட்த்தில்
இறங்கிவிட்டனர்!

• சில நாட்களுக்கு முன்
டெல்லி நேரு பல்கலைகழகத்தில் பீப்
சப்ளை செய்யப்பட்டபோது, என்
சதையை சாப்பிடுங்கள்
பசுக்களை கொள்ளாதீர்கள் என்று தன்
உடலை கீறி போராடியது பெரிய
அதிர்வு அலையை ஏற்ப்படுத்தியது.

• நான் எனது போராட்டத்தில்
எங்கு வேண்டுமானாலும் சாவேன். நான்
எங்கு இறக்கிறேனோ அங்கேயே எரிக்கவும்.
இருந்தாலும் என் போராட்டம் மக்களால்
நடத்தப்படும் என்கிறார்.

இப்படித்தான் கங்காதாஸ் என்பவர் கங்கா நதிநீர்
மாசுபாட்டை எதிர்த்து நூறு நாட்கள்
உண்ணாவிரதம் இருந்து இறந்தார். பொதுமக்கள்
நாம் மீடியாக்கள் போலவே அமைதி காத்தோம்.
அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும்
அறிவுகெட்ட ஜடங்களாக இருக்க வேண்டாம்!
-நிலவரசு கண்ணன்

[Continue reading...]

Thursday, 25 July 2013

கம்ப்யூட்டர் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி காணும்

- 0 comments
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 121.10 லட்சமாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8சதவீதம் அதிகம் என, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர்சந்தையில், "டேப்லெட்' வகை கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி சிறப்பான அளவில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இவ்வகை கம்ப்யூட்டர் விற்பனை, 424சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில், 113.10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையுடன் (108.20 லட்சம்) ஒப்பிடுகையில், 5சதவீதம் அதிகமாகும்.

சென்ற நிதியாண்டில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் விற்பனை, 1சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.69 லட்சமாக உயர்ந்துள் ளது. இதன் மூலம் கிடைத்த வருவாய் 13,468 கோடி ரூபாயாக இருந்தது. இவை, இதற்கு முந்தைய நிதியாண்டில், முறையே, 67.12 லட்சம் மற்றும் 13,527 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
மேலும், நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை, 16சதவீதம் வளர்ச்சி கண்டு, 37.24 லட்சத்திலிருந்து (ரூ. 10,318 கோடி வருவாய்), 43.08 லட்சமாக (ரூ.11,804 கோடி வருவாய்) உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்ற நிதியாண்டில், செர்வர் விற்பனை, 2சதவீதம்சரிவடைந்து, 90,699 என்ற எண்ணிக்கையிலிருந்து (ரூ.1,637 கோடி வருவாய்), 89,075 ஆக (ரூ.1,610 கோடி வருவாய்) குறைந்து உள்ளது என, எம்.ஏ.ஐ.டி., மேலும் தெரிவித்து உள்ளது.

ஜூலை 25,2013 தினமலர்
[Continue reading...]

Saturday, 6 July 2013

மலாலா தினம் - இந்தியாவின் இளம் தலைவர்

- 0 comments
பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச்
சென்று படிப்பதை தடை செய்துள்ள
தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப்
போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக
எதிர்த்தார். அத்துடன், பெண்
கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல்
கொடுத்து வந்தார். இதனால் அவர்
மீது ஆத்திரம் அடைந்த தலிபான்
தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம்
தேதி அவரை சரமாரியாக சுட்டனர்.
தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப்
போராடிய அவருக்கு லண்டனில்
சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்
பிறகு மறுபிறவி எடுத்துள்ள
மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார்.
அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக
அலுவலகத்தில் பணியாற்றுவதால்
அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்.
[Continue reading...]

Monday, 18 March 2013

இந்தியாவில் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்து

- 1 comments

இந்தியாவில் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்து India low masculinity increase in divorce

இந்தியாவில் தம்பதிகளின் மண முறிவுக்கு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாதது, ஆண் ஆதிக்கம், வரதட்சணை கொடுமை, கூட்டுக்குடும்ப தகராறு போன்றவைகள் தான் காரணமாக இருந்தது. இந்த வரிசையில் தற்போது ஆண்களின் ஆண்மை குறைவும் ஒரு காரணமாக சேர்ந்துள்ளது.
தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக டெல்லியில் உள்ள செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு ஆண்டுக்கு 58 முறை அல்லது வாரத்துக்கு ஒரு முறை உடல் உறவு கொள்வது அவசியம்.
ஆனால், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் காரணமாக பலருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது.
இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.
இதற்காக இவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளினாலும் செக்ஸ் ஆர்வம் குறைவுக்கு காரணமாகி விடுகிறது. இது தவிர புகைப்பிடிக்கும் பழக்கம், மது பழக்கம், அதிக உடல் பருமன், சிறிய உடற்பயிற்சி கூட இல்லாது பணி செய்தல் போன்றவைகளும் ஆண்மைக்குறைவுக்கு காரணமாகிறது.
நகரங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்யும் கனவன்-மனைவிகள் “செக்ஸ்” பற்றி யோசிக்க முடியாமல் பணி செய்கிறார்கள். இதுவே விவாகரத்து வரை செல்கிறது.
ஆண்மைக்குறைவு என்பது தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. ஆனால் இதனை வெளியே சொல்வதற்கு ஆண்கள் தயங்குகிறார்கள். ஆண் ஆதிக்கம் அவர்களை தடுக்கிறது. இதற்காக டாக்டரை அணுகுவதையே அவர்கள் கேவலமாக நினைக்கிறார்கள் என டாக்டர் அனுபீர் தெரிவித்தார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger