Showing posts with label நடிகர் விஜய். Show all posts
Showing posts with label நடிகர் விஜய். Show all posts

Tuesday, 20 August 2013

தலைவா படம் வெளிவர நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி - நடிகர் விஜய்

- 0 comments

தலைவா படம் வெளிவர நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி: நடிகர் விஜய் அறிக்கை thalaiva movie release action jayalalitha wish actor vijay statement

 

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
[Continue reading...]

Saturday, 17 August 2013

‘தலைவா’ பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் அனுமதி thalaiva movie producer jail heart attack allow hospital

- 0 comments
நடிகர் விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 9-ந் தேதி உலகமெங்கும் வெளியாக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் படம் வெளியானது. அங்கு படம் வெளியானதால், திருட்டு விசிடி கும்பல், இப்படத்தை திருட்டு விசிடி தயாரித்து புழக்கத்தில் விட ஆரம்பித்தது. இதனால் தயாரிப்பு வட்டாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த படம் வெளியாகாவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன். ஆகையால், படத்தை வெளியிடவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்காக படக்குழுவினருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால், உண்ணாவிரதத்துக்கு காவல்துறை தடை விதித்தது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘தலைவா’ பட விவகாரத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு, அதனால் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger