தோட்டக்காரன் வரவில்லை.எனவே தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சலாம் என ஆரம்பித்தேன். அப்போது போர்ட்டிகோவில் இருந்த கார் தூசியாக இருப்பதைப் பார்த்தேன்.காரைக் கழுவி விடலாம் எனக் கார் அருகில் சென்றேன்.கழுவ ஆரம்பிக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தது.பைப்பைக் கீழே போட்டுவிட்டு உள்ளே சென்று ஃபோனை எடுத்தேன்.
"சார் உங்களுக்கு எங்கள் வங்கியின் கடன் அட்டை வழங்குகிறோம் "என ஒரு பெண் பேச ஆரம்பித்தாள்.தொடர்பைத் துண்டித்தேன்.அப்போதுதான் நினைவுக்கு வந்தது,அந்த மாதம் கடன் அட்டைக்கான பில் கட்டவில்லை என்பது.மேசை அறையில் தேடினேன், கிடைத்தது.சரி கையோடு காசோலை எழுதி வைத்துவிட்டால்,பின் யாரிடமாவது பெட்டியில் போடச் சொல்லி விடலாம் என் எண்ணி காசோலை புத்தகத்தை எடுத்தேன். ஒரு காசோலை கூட இல்லை.
இரண்டு நாள் முன்பு வங்கியிலிருந்து வாங்கி வந்த காசோலை என் கைப்பையில் பீரோவுக்குள் இருக்கிறது.அதை எடுத்து வரலாம் எனப் புறப்பட்டேன்.டீப்பாயில் வைத்திருந்த காஃபிக்கோப்பை என் கண்ணில் பட்டது.அதில் இருந்த காஃபி ஆறிப் போயிருந்தது. சிறிது நேரம் முன்புஅதைக் குடிக்க ஆரம்பித்த போதுதான், தோட்டத்துக்கு நீர் பாய்ச்சச் சென்று விட்டேன்.வீணாக்க மனமின்றிச் சுட வைத்துக் குடிக்கலாம் என எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றேன்.
செல்லும் வழியில் பூந்தொட்டியில் இருந்த செடி வாடியது போல் தோன்றவே, தொட்டிக்குத் தண்ணீர் ஊற்றத் தீர்மானித்தேன்.காஃபிக்கோப்பையை ஜன்னலில் வைத்து விட்டு ஒரு மக்கில் தண்ணீர் எடுக்கப் போகும்போது அருகில் என் மூக்குக் கண்ணாடி இருப்பதைப் பார்த்தேன்.அதை அப்புறம் எடுத்துக்கொள்ளலாம் என்று என்று எண்ணி,தண்ணீர் எடுத்துச் செடிக்கு ஊற்ற ஆரம்பித்தேன்;சிறிது நீர் வழிந்து கீழே விழுந்தது..
அதைத் துடைக்கக் குனிந்தபோது கீழே கிடந்த என் பேனாவைப் பார்த்தேன்.அதை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தேன்.
யோசித்தேன் என்ன செய்து கொண்டிருந்தேன்?எதற்காக உள்ளே வந்தேன்?
ரொம்ப பிசியாகத்தான் இருந்திருக்கிறேன்.
ஆனால் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சப் படவில்லை.
கார் கழுவப்படவில்லை.
கடன் அட்டை பில் பணம் செலுத்தப் படவில்லை.
பூந்தொட்டிக்குத் தண்ணீர் ஊற்றப்படவில்லை.
ஒரு கப் காஃபி இன்னமும் ஜன்னலில் ஆறிக்கொண்டு இருக்கிறது.
மூக்குக் கண்ணாடி இன்னும் எங்கோ இருக்கிறது.
புதுக் காசோலைப் புத்தகம் இன்னும் எடுக்கப்படவில்லை.
இப்படி எதுவுமே நடக்காமல் நான் எப்படி பிஸியாக இருந்தேன்?
என்ன ஆச்சு எனக்கு?
இதற்குப் பதில் சொல்கிறார் நாஞ்சில் மனோ----
"வயசாயிப் போச்சி தல!ஹே ஹே!"
http://veryhotstills.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?