கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது நடவ டிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய தொழில் நுட்ப உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணு மின்நிலையத்தை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில் விரைவில் முதல் அணு உலை 2 வாரத்தில் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்தார். ஆனால் அணு உலை எதிர்ப்பாளர் களோ, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக வும், அணு மின் நிலையத் தில் உள்ள யுரேனியத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள் ளனர். இதனால் பதட்டமானநிலை சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
அதேநேரத்தில், சென்னையில் நேற்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, Ôகடந்த 15ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர். போராட்டக் குழுவினர் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை கேட்காமல், கூடங்குளம் அணுமின் நிலைய வரைபடங்கள், ரஷ்யாவுடன்
செய்த ஒப்பந்த நகல்கள், செலவினத் தொகை பற்றிய முழு விவரங்களை கேட்டுள்ளனர். அவை நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அவற்றை பகிரங்கமாக அறிவிக்க முடியாது. இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அனுமின் நிலைய செயல்பாடை இழுத்தடிக்க முயல்கின்றனர். இதை மத்திய அரசு அனுமதிக்காது.
போராட்டகாரர்கள் மீது போலீசார் இதுவரை சுமார் 160 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு, போராட்டக்காரர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்Õ என்றார்.
மாலையில் புதுவையில் பேசிய அவர், Ôபோராட்டக் காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. தன்னார்வ அமைப்புகள் பொய் பிரச்சாரம் மூலம் அவர்களை தூண்டி விடுகிறார்கள். திரு நெல்வேலி போலீசார் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லைÕ என்றார்.
மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு, கூடங்குளம் விவகாரம் குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, டிஜிபி ராமானுஜம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன், மின்வாரிய தலைவர் ராஜீவ்ரஞ்ச ன், எரிசக்தி முதன்மை செயலர் ரமேஷ்குமார் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கூடங்குளம் விவகாரத்தில், ஏற்பட்டுள்ள சட்டம் & ஒழுங்கு பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் மத்திய அரசின் உத்தரவுப்படி எப்படி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் 2 வாரத்தில் முதல் அணு உலை செயல்படத் தொடங்கும்போது, போராட்டக்காரர்களின் மிரட்டலை சமாளிப்பது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், தமிழ்நாட்டில் மின்உற்பத்தி பற்றாக்குறையாக உள்ளது. இதனால் சென்னையிலும், பிறமாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. வெயில் காலம் முடிந்தும், குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், இன்னும் மின்வெட்டு தீராதது பொதுமக்கள், வர்த்தக நிறுவனத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால் நமது மாநிலத்தில் மின்பற்றாக்குறையை குறைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?