சபரிமலை கோவிலுக்கு மலையாள நடிகர் ஜெயராம் சென்றிருந்தார்.
தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பதட்டம் நிலவி வரும் நேரத்தில், இதுகுறித்து ஜெயராமிடம் கேரள தொலைக்காட்சி நிரூபர் ஒருவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கருத்து கேட்டபோது,
''ஐயோ ஆளவிடுங்கப்பா சாமி'' என்று அந்த நிருபரின் காலில் விழுந்தார்.
நடிகர் ஜெயராம் இவ்வாறு நடந்துகொண்டது ஏன்?
கடந்த வருடம் நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சைட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன.
இந்த படம் தொடர்பான பேட்டி ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில், 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும்?" என்றார். இது அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
தமிழ் பெண்களை அவதூறாக பேசியதற்காக ஜெயராமின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமது பேச்சுக்காக ஜெயராம் மன்னிப்புக் கேட்டார். தமது தாய் தமிழ்ப் பெண் என்றும், தமது தாய் மொழி தமிழ் என்றும், தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்துவது தமது தாயை இழிவுப்படுத்துவதற்கு சமமானது என்றும், நகைச்சுவையாகவே தாம் தொலைக்காட்சியில் அவ்வாறு கூறியதாகவும் அவர் மேலும் விளக்கம் அளித்திருந்தார்.
எதையாவது பேசிட்டு மன்னிப்பு கேட்டு காலில் விழுவதைவிட, பேசாமல் காலில் விழுவதே மேலானது என்று முடிவு எடுத்துவிட்டார் நடிகர் ஜெயராம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?