தேவையான பொருட்கள்
இறால் – 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம், தக்காளி – 100 கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் – 1/4 மூடி
கசகசா – 1 டீஸ்பூன்
சோம்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/4 குழிக்கரண்டி
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி கொள்ளவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
* தேங்காய், இஞ்சி, பூண்டு, கசகசாவை அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயத்தை வதக்கவும். வதக்கிய வெங்காயத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
* தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து மசாலா முறிந்ததும் இறாலைப் போட்டு வெந்ததும் இறக்கிவிடவும்.
`செப்' தாமு
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?