மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களது 73வது பிறந்ததின நிகழ்வு பிரதான வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10.00 மணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் ஆனந்தராஐh தலைமையில் ஆரம்பமான நிகழ்வு பி.ப 1.00 மணி வரை இடம்பெற்றது.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தமிழ் மக்கள் மீது மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறியபௌத்த சிங்களப் பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இன அழிப்புத் தொடர்பாகவும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சர்வதேச நாடுகள் மத்தியில் அவர் மேற்கொண்ட இராஐதந்திரப் பணிகள் பற்றியும், சிங்கத்தின் கோட்டைக்குள் இருந்தவாறு தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்காகவும், சிறீலங்கா அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும் துணிச்சலுடனும், நேர்மையுடனும் அவர் மேற்கொண்ட அறப் போராட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் குழந்தைவேலு, சுந்தரலிங்கம், கணேசராசா, யோசெப் அந்தோனிப்பிள்ளை, சோமசுந்தரம், மரியரட்ணம், ஆறுமுகம் ஆகியோர் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தனர்.
குழந்தைவேலு, திருமதி.பத்மினி சிதம்பரநாதன், காண்டீபன், கணேசராசா, சோமசுந்தரம், செல்வராசா கஜேந்திரன், ஆனந்தராசா ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சட்டவாளர்கள் பொது மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு மாமனிதருக்கு வணக்கம் செலுத்தினர்.
http://maangaai.blogspot.com
http://maangaai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?