மேலாடையின்றி அரை நிர்வாணமாக கியூபெக் சட்டமன்றத்தில் பெண்கள் புகுந்ததால் பரபரப்பு !!
by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,
பொது இடங்களில் மத அடையாளங்களை தடை செய்யும் வகையில் கியூபெக் அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி வரும் நிலையில் இன்று இதற்கு எதிரான நூதன ஆர்ப்பாட்டம் ஒன்று கியூபெக் சட்ட சபையிலும் எதிரொலித்தது.
மத அடையாளம் ஒன்றை சுவரில் வைக்கப்பட்டு இருந்ததை எதிர்த்து சில பெண்கள் கோஷமிட்டுக் கொண்டே கியூபெக் சட்ட மன்றத்தில் புகுந்தனர். அப்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது. வரி தொடர்பான சில கேள்விகளுக்கு கியூபெக் முதல்வர் Pauline Marois பதிலளித்துக் கொண்டிருந்தார்.
கேள்வி நேரத்தின் போது முதல்வரை பேச விடாமல் ஆக்ரோசமாக கத்திய இந்தப் பெண்கள் திடிரென தங்கள் மேலாடைகளை கழற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிராக மத அடையாளங்களை பொது இடங்களில் பயன்படுத்த தடைச் சட்டம் கொண்டு வந்துள்ள அரசு, சட்டமன்றத்தில் மட்டும் மத அடையாளங்களை பயன்படுத்தலாமா என்பதே ஆர்ப்பாட்டம் செய்த பெண்களின் கேள்வி.
உடனடியாக சட்டமன்ற சுவரில் தொங்க விடப்பட்டிருந்த மத அடையாளம் நீக்கப்பட வேண்டும் என்றும் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் கியூபெக் சட்டசபையில் இருந்த அனைவரையும் திகைப்புக்கு உள்ளாக்கியது. பின்னர் இந்த பெண்கள் பாதுகாப்பு போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
கியூபெக் அரசின் மதச்சார்பின்மை அணுகுமுறை மத சம்பந்தமான பொருட்கள் வைப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கியூபெக் கலாச்சாரத்தின்படி பெரிய சிலுவையையோ மற்ற குறியீடுகளையோ வைத்திருப்பது சாதரணமான ஒன்று.
எனினும் இந்த சம்பவம் எந்த மத அடையாளத்தையும் இனி பொது இடங்களில் பயன்படுத்த முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
The post மேலாடையின்றி அரை நிர்வாணமாக கியூபெக் சட்டமன்றத்தில் பெண்கள் புகுந்ததால் பரபரப்பு !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?