Wednesday 2 October 2013

சென்னையில் தினமும் 4 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது chennai daily rowdy on gunder law

சென்னையில் தினமும் 4 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது chennai daily rowdy on gunder law
Tamil NewsToday, 05:30

சென்னை, அக். 2–

சென்னையில் குற்றங்களை குறைக்க போலீஸ் அதிகாரிகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக, பழைய ரவுடிகள், ஜெயிலில் விடுதலையாகி வெளியே வரும் ரவுடிகள், தலைமறைவு ரவுடிகள், புது ரவுடிகள் என 4 வகையாக பட்டியல் எடுத்து அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

இதில் பிடிபடும் ரவுடிகளில் தினமும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு 1000 ரவுடிகளுக்கு மேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் நகரில் குற்றங்கள் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் வடசென்னையில்தான் அதிகமான ரவுடிகள் பிடிபட்டுள்ளதாகவும், காக்கா தோப்பு பாலாஜி வெங்கடேசன், கட்டராஜா, குன்றத்தூர் வைரம் உள்பட 15 ரவுடிகள் கோர்ட்டில் சரண் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

காக்கா தோப்பு பாலாஜி மீது 4 கொலை உள்பட 40 வழக்குகளும் குன்றத்தூர் வைரம் மீது 11 வழக்குகளும், உள்ளன.

பெரிய ரவுடிகள் மட்டு மின்றி வழிப்பறியில் ஈடுபடுபவர்கள், பெண்களிடம் தங்க செயின் பறிக்கும் மோட்டார் சைக்கிள் கொள்ளையர், வீடு புகுந்து திருடுபவர்கள் பலர் சிறையில் உள்ளதால் நகரில் குற்றங்கள் குறைந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குண்டர் சட்டத்தில் சிறைக்கு செல்லும் ரவுடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வழிப்பறி மட்டுமின்றி அடி–தடி வெட்டு குத்து சம்பவங்களும் குறைந்து வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger