Friday 13 September 2013

மனைவியிடம் எப்போதும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!!! Top ten news dont tell to your wife

மனைவியிடம் எப்போதும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!!!

திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர். கடைசி வரை நம்முடன் வரப் போவது வாழ்க்கைத்துணை மட்டும் தான். அதனால் ஆண்கள் குடும்ப சக்கரங்கள் சீராக ஓட மனைவியிடம் அன்பாக அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணுவீர்கள். ஆனால் அனைத்தையும் சொல்லக் கூடாது என்று யாரவது உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா?

பொதுவாக மனைவியிடம் எதை சொல்ல கூடாது என்று யாருமே சொல்வதில்லை. என்ன செய்வது! நாம் திருமணத்தின் போது திருமண மந்திரங்களை ஓதுவதற்கு பதிலாக, ஐயருக்கு லஞ்சம் கொடுத்து மனைவியிடம் சொல்லக்கூடாத முதன்மையான 10 விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படி கேட்டால் அது என்னவாக இருக்கும் என்று தெரியுமா? அதைத் தான் தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது.

"நீ டயட்டில் இருப்பது நல்லது"

வீட்டையும் பராமரித்து, உங்களையும் பார்த்துக் கொள்ளும் போது, உங்கள் மனைவியின் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படலாம். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் கூட, டயட்டை பற்றி எல்லாம் கூறிவிடாதீர்கள். முக்கியமாக நீங்கள் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருக்கும் போது!

"என்னை போல் நீயும் ஏன் நீண்ட நேரம் வேலை செய்யக் கூடாது?"

உங்கள் கஷ்டம் புரிகிறது. உங்கள் வேலை பளு காரணமாக மனைவியிடம் உரையாடலில் ஈடுபட்டு, மனதை சாந்திப்படுத்த நினைப்பீர்கள். அப்படி பேசும் போது, நீங்கள் இப்படி வேலை பார்ப்பது குடும்பத்துக்காக நீங்கள் செய்யும் பெரிய தியாகம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். சொல்லியும் அது ஒன்றும் உதவ போவதில்லை. அவர்கள் வீட்டையும், குழந்தையும் பார்த்துக் கொள்ளும் வேலையை விட்டால் என்ன ஆகும்? சற்று யோசித்து பாருங்கள்.

கண்டிப்பாக உங்கள் மனைவிக்கு உங்கள் அலுவலக கதையை கேட்பதில் நாட்டம் இருக்காது. நீங்கள் வீட்டிற்கு வந்ததும், அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவே அவர்கள் விரும்புவார்களே தவிர, உங்கள் அலுவலக பிரச்சனைகளை அல்ல. வேண்டுமெனில் தினமும் பேசாமல், எப்போதாவது பேசினால் கூட சரி தான்.

"அவள் அழகாக இருக்கிறாள் அல்லவா!"

இதனை எப்போதாவது உங்கள் மனைவியிடம் கூறி, மற்ற பெண்களை நீங்கள் கவனிப்பதை பற்றி உங்கள் மனைவிக்கு தெளிவாக கோடு போட்டு கொடுக்கிறீர்களா? உங்களை சுற்றி கன்னி வெடிகள் புதைக்கப்பட்டு விட்டன!

"எனக்கு பேச தோன்றவில்லை"

இத்னை எப்போதாவது சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால் இது அடிக்கடி கூறப்பட்டால், உங்களுக்கு இடையில் கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும். அதனால் மனைவியிடம் மனம் விட்டு பேச பழகி கொள்ளுங்கள்.
"எப்போ பார்த்தாலும் குறை கூறி கொண்டே இருப்பியா?"

இப்படி சொல்வதை தவிர்க்கவும். அதிலும் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் உங்கள் மனைவியிடம், இப்படி நீங்கள் கூறும் போது பத்திரகாளியாக மாறலாம்.

"திரும்ப திரும்ப ஏன் ஷாப்பிங் செல்கிறாய்?"

உங்களுக்கு அவர்கள் அடிக்கடி ஷாப்பிங் செல்வது பிடிக்காது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களையும் நீங்கள் குஷிப்படுத்த வேண்டும் அல்லவா? அந்த குஷி ஷாப்பிங்கில் தான் கிடைக்கும் என்றால், அது உங்கள் விதி. குறை சொல்வதற்கு பதில் அதனை கையாளுங்கள்.

"நீ ஏன் இந்த ஆடையை அணிவதில்லை?"

நீங்கள் ஒரு பேஷன் டிசைனராக இல்லாத பட்சத்தில், அவர்களின் ஆடைகளை பற்றி தொடர்ந்து உங்கள் கருத்தை திணிப்பது பெரிய சண்டையில் தான் முடியும். வேண்டுமெனில் உங்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களுக்கு அன்பாக பரிந்துரை செய்யுங்கள்.

"இந்த நேரம் வரமால் முன்னாடியே வந்திருக்கலாம்"

இதனை ஒரு தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று நினைத்தால், உங்களுக்கு இன்னொரு அடி காத்துக் கொண்டிருக்கிறது. மாதவிடாய் பற்றி நீங்கள் இப்படி கூறுவது அவர்களை அவமானப்படுத்துவதை போல் ஆகிவிடும். ஆகவே அதனை என்றுமே உங்கள் மனைவியிடம் கூறக் கூடாது.

"நீ உன் அம்மா போலவே நடக்கிறாய்"

முக்கியமாக சொல்லக்கூடாத ஒன்று இருக்கிறது என்றால், அது இது தான். எந்த ஒரு பெண்ணுக்கும் மற்ற பெண்களிடம் ஒப்பிடுவது பிடிப்பதில்லை. முக்கியமாக அவர்களின் தாயாருடன். அவர்களின் தாயின் மீதான உங்கள் கருத்தை சொல்கிறீர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். வருடம் முழுவதும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்ய வேண்டாம் தானே? அப்படியானால் எப்போதும் இதனை சொல்லாதீர்கள்.

திருமணம் என்பது இருவரின் சங்கமம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து நடந்தால் தான், அந்த வாழ்க்கை அமைதியாக சந்தோஷமாக பயணிக்கும் என்பதை புரிந்து சரியாக நடந்து சந்தோஷமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.
Share |

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger