ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டருந்தனர். நளினி, முருகன் ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவர்.
நளினி சிறைக்கு செல்லும்போது, கர்ப்பமாக இருந்தார். சிறையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கணவன் மனைவியான முருகன் நளினி ஆகியோர், 15 தினங்களுக்கு ஒருமுறை சந்திக்க வேண்டும் என நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்றனர். அதன்படி 15 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 2011 ஜனவரி வரை வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக முருகன் நளினி இருவரும் சந்திக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான கடிதமும் சிறைத்துறைக்கு வந்துவிட்டது. இதுபற்றிய தகவல் சம்பந்தப்பட்டவர்களிடம் சிறைத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கணவர் உள்பட மூன்று பேருக்கு தூக்கு தண்டனை என்றதும், நளினி அவர்களை சந்திக்க விருப்பப்படுவதாக மீண்டும் சிறைத்துறையிடம் கடிதம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் என்ன மாதிரியான முடிவினை அரசு எடுக்கப்போகிறது என்பது இதுவரை தெரியவில்லை.
http://sex-dress.blogspot.com
http://sex-dress.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?